#திருப்பாவை-பாசுரம் 30

ஆண்டாளின் திருப்பாவையால் அடையும் நன்மை வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். வடக்கில் உள்ள மலையை மத்தாக நிறுத்தி,வாசுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி,அலைகள் நிறைந்த திருப்பாற்கடலை கடைந்த திருமகளின் கணவனான மாதவனும்,கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான…

#திருப்பாவை-பாசுரம் 29

மற்ற ஆசைகளை நீக்கி அருள வேண்டும் கண்ணா ! சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன் பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். அழகான வைகறைப் பொழுதில் மிகச் சீக்கிரமாக எல்லோரும் எழுந்து வந்து, உன்னை வணங்கி,உன் தங்கத் தாமரை போன்ற திருவடிகளைப் போற்றும் காரணத்தை…

#திருப்பாவை-பாசுரம் 28

  கோபப்படாமல் எங்கள் பரிசை தந்தருள் கண்ணா ! கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம் அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம் குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய். பசுக்களை மேய்த்து,அதன் பின்னால் காட்டுக்குச் சென்று,அங்கு அனைவரும் ஒன்று கூடி உணவு உண்ணும் இயல்பு உடையவர்கள் நாங்கள்.அறிவு குறைந்திருக்கும் எங்கள் இடையர் குலத்தில்…