கலியநாயனார் புராணம்

படம் மூலம் : https://www.himalayanacademy.com/view/bb77_rajam பெரிய உலகில் புகழில் ஓங்கிய பெரிய நல்ல நாடு தொண்டை நாடு.அங்கு,கங்கை நீர் உலவும்  சடைத் திரளை  உடைய ‘நிருத்தர்’ எனப்படும் கூத்தாடும் சிவபெருமான் எழுந்தருளிய திருவொற்றியூர் உள்ளது.கருமையான மேகங்கள் உலவும் மலர்கள் நிறைந்த சோலைகள் திருவொற்றியூரைச் சூழ்ந்திருக்கும்.அங்கு உள்ள மதில்கள்,தோன்றிய நாள் முதல் பகைவர்களால் அழிக்கப்படாமல் தோன்றியபோது இருந்தது போல நிற்கும்.அந்த மதில்களின் அனைத்துப்  பக்கங்களிலும்,தேர் உலவும் நீண்ட வீதிகள் சூழ்ந்திருக்கும்.அத்தகையச் சிறந்த ஊர் திருவொற்றியூர் ஆகும். பேர் உலகில் ஒக்கு…

பாணினி வியாகரணம் @ திருவொற்றியூர் |Paanini’s Grammar @ Thiruvotriyur

பாணினி வியாகரணம் @ திருவொற்றியூர் பாணினி எனும் முனிவருக்கு,வேதங்கள் அனைத்தையும் அறிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதற்காகப் பிரம்மாவை வேண்டி கடுமையாக தவம் செய்தார்.பாணினியின் தவத்தை அறிந்த பிரம்மா அவருக்குக் காட்சி தந்து,’நீண்ட காலம் தவம் செய்து விட்டாய்,அதனால் உன்னிடம் அவசரமாக வந்தேன். உன் எண்ணம் நிறைவேற,நீ ஆதிபுரி எனும் கோயிலுக்குச் சென்று,அங்கு இருக்கும் சிவனை வணங்கினால் ,அவர் உனக்கு வேதங்களை எல்லாம் உபதேசித்து அருள் புரிவார்”,என்று கூறி மறைந்தார். பாணினியும் பிரம்மா சொல்லியபடி ஆதிபுரி…

மீனாட்சி சுந்தரேஸ்வரர் @ திருவொற்றியூர் | Meenakshi Sundareswarar @ Thiruvotriyur

மீனாட்சி சுந்தரேஸ்வரர் @ திருவொற்றியூர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு,தான் சட்டக் கல்லூரி சென்ற காலங்களில் திருவொற்றியூர் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் வழக்கத்தை வைத்திருந்தார் காட்டுக்கோயிலைச்(மயிலாப்பூர்) சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர்.அப்படி செல்லும் போது சிவலிங்கம் ஒன்று,ஒற்றீஸ்வரர் சன்னதிக்குப் பக்கத்தில் மண்டபம் ஏதும் இல்லாமல் மண்ணில் கிடப்பதைக் கண்டு அதை வணங்கி வந்தார்.வக்கீல் தொழிலில் ஒரு நல்ல நிலைக்கு வந்து பின்,எப்போதும் போல் திருவொற்றியூர் கோயிலுக்குச் சென்று அந்தச் சிவலிங்கத்தை வழிபட்டுக் கொண்டிருந்த அவரிடம்,வயதான சிவனடியார் ஒருவர் வந்து அந்தச் சிவலிங்கத்திற்கு…