பண்டமாற்றம் @ பட்டினப்பாலை | Barter system @ Pattinapaalai

பண்டமாற்றம் @ பட்டினப்பாலை வெண்மை நிற உப்பிற்கு,வாங்கிக் கொள்ள வேண்டிய விலையாகப் பெற்ற நெல்லொடு வந்த வலிமை வாய்ந்த படகுகள் கரையில் இருக்கும்.அவை,லாயத்தில் கட்டி வைத்திருக்கும் குதிரைகள் போல கோலில் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். பல சிறிய ஊர்கள் கொண்ட பெரிய சோழ நாட்டில்,அத்தகைய கரைகள் சூழ்ந்த தோட்டங்களையும்,பெருமை கொள்ளத்தக்க புது வருவாயைத் தருகின்ற தோப்புகளையும்,அவற்றுக்குப் பக்கத்தில் பூஞ்சோலைகளையும் உடையது காவிரிப்பூம்பட்டினம். குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி பணை நிலைப்…

காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வமும் அமைதியும் @ பட்டினப்பாலை|Wealth & peace in Kaveripoompattinam  @ Pattinapaalai

  காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வமும் அமைதியும் @ பட்டினப்பாலை அகலமான வீட்டின் பெரிய முன் வாசலில்,நெல்லை உலர வைத்திருப்பார்கள்.அதை உணவாகத் தின்ன அங்கு கோழிகள் வரும்.கோழிகளை விரட்ட தங்களின் வளைந்த சுற்றினை உடைய கனமான குழையை,மின்னும் நெற்றி உடைய,மென்மையான பார்வை கொண்ட,அழகான நகைகள் அணிந்த பெண்கள் எறிவார்கள்.அப்போது,கால்களில் தங்க நகைகள் அணிந்த சிறுவர்கள்,குதிரை இல்லாத மூன்று கால்கள் உடைய தங்கள் சிறிய தேரை உருட்டி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.பெண்கள் வீசிய குழை,சிறுவர்களின் தேர் முன் விழுந்து,அதைத் தொடர்ந்து செல்லவிடாமல் தடுக்கும்…

காவிரிப்பூம்பட்டினத்தின் வயல் நிலங்கள் @ பட்டினப்பாலை |Kaveripoompattinam Fields @ Pattinapaalai

காவிரிப்பூம்பட்டினத்தின் வயல் நிலங்கள் @ பட்டினப்பாலை காவிரிப்பூம்பட்டினத்தில் விளைச்சல் தொழில் மாறாத அகன்ற வயல்கள் காணப்படும்.முதிர்ந்த கருமை நிற கரும்பின் மணம் கமழும் பாகைக் காய்ச்சும் ஆலைகளில் இருந்து வரும் புகையின் வெப்பம் சுடுவதால், நீர் நிறைந்த வயல்களில் இருக்கும் நீண்ட நெய்தல் மலர்கள் அழகு கெடும்படி வாடிக் காணப்படும். அங்கு இருக்கும் நெற்கூடுகளின் நிழலில்,காய்ந்த செந்நெல் கதிரைத் தின்ற வயிறுடைய எருமையின் முதிரிந்த கன்றுகள் உறங்கும்.குலைகள் உடைய ‘தெங்கு’ எனும் தென்னை மரம்,குலைகள் உடைய வாழை…

காவிரி @ பட்டினப்பாலை|Kaviri @ Pattinapaalai

காவிரி @ பட்டினப்பாலை குற்றம் இல்லாத புகழுடன் மின்னும் சுக்கிரன் என்ற கோள்மீன் திசைமாறித் தென் திசை பக்கம் போகலாம்.தன்னைப் பாடும்,நீர்த்துளிகளை உணவாகக் கொண்ட பறவை(வானம்பாடி) வருந்துமாறு,மழை பெய்வதைத் தவிர்த்து வானம் பொய்க்கலாம்.ஆனால்,மலையில் துவங்கி கடலில் புகும் காவிரி ஆறு,என்றும் தவறாமல் தன்னுடைய நீரை பரப்பிப் பொன்னைக் கொழிக்கும். வசையில் புகழ் வயங்கு வெண்மீன், திசை திரிந்து தெற்கு ஏகினும், தற்பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும்,தான் பொய்யா மலைத் தலைய…