நன்னன் அரண்மனை வாசல் (2) @ மலைபடுகடாம் |Front yard of Nannan’s palace (2) @ Malaipadukadaam

நன்னன் அரண்மனை வாசல் (2) @ மலைபடுகடாம் நன்னன் அரண்மனை வாசலில் இருந்தவை: மலையில் அழகாக ஆடும் மென்மையான மயில்கள், காட்டில் வாழும் கோழி , கவரும் குரல் உடைய சேவல், காட்டில் விளையும் முழவு போன்ற பெரிய பலாப் பழம், இடித்த மாவில் கற்கண்டைக் கலந்தது போல,நறுமணமான மாம்பழப் பிஞ்சில் இருந்த வடித்த சாறைக் கொண்டு செய்த இனிய பழத்தின் பண்டம்(என்ன பண்டமா இருக்கும் !), மழை தூறலில் மகிழ்ந்து படர்ந்த அரும்புகளுடன் வளர்ந்த கொடி,…

நன்னன் அரண்மனை வாசல் (1) @ மலைபடுகடாம்|Front yard of Nannan’s palace (1) @ Malaipadukadaam

நன்னன் அரண்மனை வாசல் (1) @ மலைபடுகடாம் நன்னன் அரண்மனை வாசலில் இருந்த சில உயிரினங்கள்: நெருப்பைக் காண்பது போன்ற பூங்கோம்புகள் உடைய வெண் கடம்பு மரத்தில்,தன் கூட்டம் ஓடிப் போனதால் வலிய வந்து அகப்பட்ட மென்மையான நடை உடைய ‘ஆமான்’ என்னும் காட்டுப் பசுவின் கன்று, குட்டி யானை, வாய் திறக்காத கரடியின் வளைந்த அடிகள் உடைய குட்டி, உயர்ந்த நிலத்தைக் கையாளும் வேகத்தை உடைய வளைந்த கால்கள் கொண்ட மலையில் வாழும் ‘வருடை’ என்னும்…

நன்னனின் ஊர் @ மலைபடுகடாம் |Nannan’s city @ Malaipadukadaam

நன்னனின்  ஊர் @ மலைபடுகடாம் செல்வம் தங்கும் உயர்ந்து ஓங்கி விளங்கும் மதில்கள் உடைய ஊரை விட்டு போவதை அறியாத பழமையான குடிமக்கள் வாழ்வார்கள். காலி இடம் இல்லாத அகன்ற சிறந்த பெரிய அங்காடித் தெருவையும்,ஆறு போலக் கிடக்கும் பெரிய தெருக்களையும் கொண்டது. திருவிழா போல எப்போதும் அங்கு மக்கள் கூட்டம் காணப்படும்.பகைவர்கள் அஞ்சும் பிரியும் குறுந்தெருக்கள் உடையது. கடல் போல,மழை போல ஒலிக்கும் ஆரவாரத்தோடு,மலை போல மேகம் போல ஓங்கிய மாடங்கள் உடையது. அன்புடையவர்கள் ஊடல்…

குமிழி @ மலைபடுகடாம் |Whirlpool  @ Malaipadukadaam

  குமிழி @ மலைபடுகடாம் வெள்ளையான நெல்லை அறுக்கும் உழவர்கள் கொட்டும் தண்ணுமை இசைக்கருவியின் ஒலிக்கு பயந்து,சிவந்த கண்ணுடைய எருமைக் கூட்டத்தைப் பிரிந்த கடா ஆரவாரம் கலந்த வேகத்தோடு உங்களை நோக்கி விரைந்து வரலாம்,அதனால் பாதுகாப்பாகச் செல்லுங்கள். குயவன் மண் பாண்டங்கள் செய்யும் இடத்தில் இருக்கும் உருளையின் சுழற்சி போல குமிழி சுழலும். விரைந்து ஓடும் வாய்க்காலில்,நீர் ஓயாமல் ஓடி ஒலி எழுப்பும் காட்சி காண்பவர்கள் விரும்பும் காட்சி ஆகும்.அதனால்,இனிய சேயாற்றின் வளமை உடைய ஒரு கரை…

மீன் சோறு @ மலைபடுகடாம் |Fish rice  @ Malaipadukadaam

மீன் சோறு @ மலைபடுகடாம் முள்ளை நீக்கி ஆக்கிய வெள்ளை மீன் துண்டுகள் உடைய வெண்மையான சோற்றைத் தருவார்கள்.வண்டுகள் வந்து தன் மீது படியும்படி நறுமணம் கமழும் தேன் சொரிகின்ற தலை மாலையையும்,உறுதியான தேரும் கொண்ட நன்னனுக்கு உணவாக இவை பொருந்தும் எனக் கண்டவர்கள் வியக்கும்படி,சுற்றத்தாரோடு அருந்துங்கள்.பிறகு எருத்தை அடிக்கின்ற வயல் களத்தில் வேலை செய்யும் உழவர்கள் பாடும் பாட்டுடன் இசைக்கும்படி,நல்ல யாழில் மருத பண்ணை வாசித்து இளைப்பாறிச் செல்லுங்கள். முள் அரித்து இயற்றிய வெள் அரி…

வாளை & வரால் மீன் @ மலைபடுகடாம் |Valai & Varal fish  @ Malaipadukadaam

வாளை & வரால் மீன் @ மலைபடுகடாம் ‘கண்பு’ என்னும் சம்பங்கோரை மலிந்திருக்கும் வயல்கள் எங்கும் மணம் கமழும்.   அங்கு,மீனவர்கள் தேடி வலை வீசி பெரிய கழுத்து உடைய வாளை மீனைப் பிடித்துக்கொண்டு வருவார்கள்.சிலர் ஒரு இடத்தில் நிலையாக நின்று,நீண்ட கயிறு உடைய தூண்டிலைப் போட்டு,சிவந்த கண் உடைய,பெண் யானையின் தும்பிக்கை போல உருவம் கொண்ட வரால் மீனைப் பிடித்து வருவார்கள்.   பகன்றை மலர்களை மாலையாகக் கட்டி தலையில் அணிந்த கள் விற்கும் பெண்கள்,உடுக்கையின்…

புதவு & அவல் @ மலைபடுகடாம்|Puthavu & Aval @ Malaipadukadaam

புதவு & அவல் @ மலைபடுகடாம் பொலிவில்லாத அடிமரம் உடைய காஞ்சி மரத்தையும்,நீர் பொங்கி வரும் ‘புதவு’ என்னும் மதகின் வாய்களையும்,மென்மையான ‘அவல்’ எனப்படும் நீர் நிற்கும் பள்ளமான விளைநிலங்களையும் உடைய ஊர்கள் கொண்டது நன்னனின் குளிர்ந்த மருத நில நாடு. அனைத்து ஊர்களிலும் நல்ல யாழில் இருந்து எழும் இசையைப் போன்ற இன்பம் தரும் இனிமையான சோலைகளிலும்,இருப்பிடங்களிலும் இருக்கும்.நீங்கள் அங்குப் பல நாட்கள் தங்கினாலும் அல்லது ஒரு நாள் மட்டும் தங்கிச் சென்றாலும்,உங்களுக்கு அங்கு நல்ல…

ஞெகிழி @ மலைபடுகடாம்|Negizhi @ Malaipadukadaam

  ஞெகிழி @ மலைபடுகடாம் மென்மையான மரத்தின் விறகினால் ஆன கொள்ளிக்கட்டையை எரித்து,பனியை நீக்கி இனிதாக உறங்கி,இருளை நீக்கும் விடியல் காலத்தில் பறவைகளின் ஒலியைக்கேட்ட பின் செல்லுங்கள். நொய்ம் மர விறகின் ஞெகிழி மாட்டி பனி சேண் நீங்க இனிதுஉடன் துஞ்சி புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின் குறிப்பு நொய் மரம்-மென்மையான மரம். ஞெகிழி-கொள்ளிக்கட்டை புலரி-இருள் நீக்கு (புல்-இருள் அரி-நீக்கு புள்-பறவை ஓர்த்து-ஆராய்ந்து சேண்-தூரம் Negizhi @ Malaipadukadaam Chooses woods from soft trees to…

கறிசோறு & தினை மாவு @ மலைபடுகடாம் |Mutton rice & Thinai mavu(Foxtail millet flour)  @ Malaipadukadaam

கறிசோறு & தினை மாவு @ மலைபடுகடாம் கரிய இடத்தில்,தங்கத்தை நொறுக்கியது போல இருக்கும் ஒரே மாதிரியான நுண்மையான அரிசியில்,வெட்டிய வெள்ளை ஆட்டின் கறியைப் போட்டு கறிசோறு சமைத்து வைத்திருப்பார்கள்.அதில் குளுமையான நுண்மையமான நெய்யையும் ஊற்றியிருப்பார்கள்.இளைப்பாறத் தங்கும் இடங்களில் இதனை நீங்கள் எல்லா நாட்களிலும் பெறுவீர்கள். மேலும்,நுண்மையாக இடிக்கப்பட்ட தினை மாவில்,வெல்லத்தைப் போட்டு உங்களுக்குத் தருவார்கள்.பொடி போல இருக்கும் இந்த உணவு, தன்னை உண்ணுபவர்களை வேறு எதையும் உண்ண விடாமல் தடுத்து விடும். பொன் அறைந்தன்ன நுண்…