தோல் படுக்கை @ மலைபடுகடாம் |Animal skin bed @ Malaipadukadaam

  தோல் படுக்கை @ மலைபடுகடாம் மிருகங்களின் தோலை உரித்து மிதித்துச் செய்யப்பட்ட தோல் படுக்கை,மென்மையான மயிர் அடக்கிய மெத்தைப் போல இருக்கும்.தீயை துணையாக வைத்துக் கொண்டு அங்குத் தங்கிச் செல்லுங்கள். துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன மெய் உரித்து இயற்றிய மிதி அதட் பள்ளி தீத் துணையாகச் சேந்தனிர் கழிமின் குறிப்பு சேக்கை-மெத்தை அதள்-தோல் Animal skin bed @ Malaipadukadaam Animal skin will be peeled,hit and made as rugs.They…

ஆட்டு வகைகள் @ மலைபடுகடாம் |Types of goats @ Malaipadukadaam

ஆட்டு வகைகள் @ மலைபடுகடாம் பண்டங்களைப் பகிர்ந்து அதற்கு மாற்றாகப் பெற்ற கலந்திருக்கும் பல நெற்குவியல்கள் போல,’தகர்’ என்னும் ஆட்டுக்கடா,’துருவை’ என்னும் செம்மறியாடு,வெள்ளைநிற வெள்ளாடு ஆகியவை கலந்து காட்டில் மேயும்.அங்கு நீங்கள் சென்றால் ‘கல்’ என்னும் ஓசை கடலின் இரைச்சல் போலக் கேட்கும்.பல ஆட்டு இனக் கூட்டங்கள் இருக்கும் அந்த இடத்திற்கு நீங்கள் இரவு நேரத்தில் சென்றால்,பாலும் தங்களுக்காக சமைத்த ‘மிதவை’ என்னும் வெந்த சோறையும் உங்களுக்குத் தருவார்கள். பகர் விரவு நெல்லின் பல வரியன்ன தகர்…

பசும் பால் @ மலைபடுகடாம் |Cow’s milk @ Malaipadukadaam

பசும் பால் @ மலைபடுகடாம் புலி வருவதைக் கண்டு வெறுத்து ஓடிய தனது விருப்பமான துணையை நினைத்து,கலைமான் நின்று கூப்பிடும் காட்டை நீங்கள் முறையாகக் கடந்து விடுங்கள்.வில்லின் ஓசைக்கு அஞ்சிய சிவந்த கண் உடைய மரையேறு தனக்கு முன்பாக இருக்கும் குறுங்காட்டில் விரைந்து ஓடும்.மணக்கும் கொடிகளை உடைய அத்தகைய காட்டில்,வேறு புலங்களில் சென்று மேய்ந்த ஏற்றை உடைய கோவலர்கள் இருப்பார்கள்.அவர்களின் வளையல் அணிந்த பெண்கள் நீங்கள் மகிழும்படி,சங்கு போன்ற வெண்மையான இனிய பசும் பாலை உங்களுக்குத் தாராளமாகத்…

மராஅம் @ மலைபடுகடாம்|Maraam @ Malaipadukadaam

மராஅம் @ மலைபடுகடாம் நீங்கள் போகும் இடத்தில் பலரும் அறிய வேண்டும் எனப் புகழ் பெற்றவர்களின் பெயர்கள் பொரித்த கற்கள்,நல்ல அடிமரத்தை உடைய ‘மராஅம்’ என்னும் வெண்கடம்பு மரத்தின் நிழலில் நடப்பட்டிருக்கும்.பிரியும் பாதைகளில்,கடவுளாக இருக்கும் இத்தகைய கற்களால் உயர்ந்த காடுகள் மற்ற இடங்களை இகழ்வது போலத் தோன்றும்.நன்னனிடம் ஒட்டாமல் விலகிச் சென்ற மனம் ஒட்டாத,அவனை நினைத்தாலே நடுங்கும் பகைவர்கள் வாழும் பல ‘சுரம்’ என்னும் தரிசு நிலங்களும் அங்கு உண்டு. செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார்…

புல்முடிதல் @ மலைபடுகடாம் |Knotting grass for identification @ Malaipadukadaam

புல்முடிதல் @ மலைபடுகடாம் ஒரு இடத்தின் வரலாற்றை நன்றாக அறியாமல் நீங்கள் அங்குச் செல்ல நேரிடும்.அப்படி செல்லும்போது அங்கு உள்ள பல வழிகள் கூடும் சத்துகளைக் கையால் சுத்தம் செய்து அடையாளமாகப் புல்லை முடிந்து அங்கு வையுங்கள். (இப்படி செய்வது பின்னால் வருபவர்களுக்கு இது சந்து என அறிய உதவும்) பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர் சந்து நீவிப் புல் முடிந்து இடுமின் குறிப்பு பண்டு-பழமை நற்கு-நன்மை Knotting grass for identification @…

நடுகல் @ மலைபடுகடாம் |Hero stone  @ Malaipadukadaam

நடுகல் @ மலைபடுகடாம் ஆண் யானைகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டு சண்டையிடுவது போல,ஒன்றோடு ஒன்று கூடி நெருங்கி இருக்கும் பாறைகள் மேல் மழை பொழியும் காடுகள் பல அங்கு உள்ளன.தங்கள் ஆணையைப் பின்பற்றாத பகைவர்கள் வெப்பமான போர்களத்தை விட்டு ஓடியவுடன் வீரர்கள் ஆரவாரம் செய்வார்கள்.வெட்கத்துடன் அதைப் பொறுக்கமுடியாத வீரர்கள்,தங்கள் உயிரை கொடுக்க இது தான் சரியான இடம் என்று கருதி,மீண்டும் பகைவர்களுடன் போர் செய்து தன் உயிரை விடுவார்கள்.அத்தகைய வீரர்களின் அழிவில்லாத நல்ல புகழை உடைய…

சிறுகாட்டு வழி @ மலைபடுகடாம் |Small forest path @ Malaipadukadaam

  சிறுகாட்டு வழி @ மலைபடுகடாம் எங்கும் பரவும்படி மிகுந்த புகழ் உடைய நன்னனின் நீங்காத சுற்றமோடு,பார்க்க உயர்ச்சி மிகுந்த உயர்வான மழை மேகமோ என மயக்கம் தரும் பல யானைகளும்,போர் புரிய வந்த பகை அரசர்களை நிலை குலைய செய்யும் அரணும் வழியில் உண்டு. பின்னி வைத்தது போலப் பிணைந்த செடிகள் உடைய சிறுகாட்டு வழிகள் எங்கும்,முன் செல்பவர்கள்,செல்லும்போது தங்கள் மேல் படும் திரண்ட கிளைகளை மிக வேகமாகப் பிடித்து,அந்தப் பகுதியை கடந்தவுடன் விட்டு விடுவார்கள்.அவை…

கைத்தடி @ மலைபடுகடாம் |Walking stick @ Malaipadukadaam

கைத்தடி @ மலைபடுகடாம் பெரிய மலைக் கூட்டங்களில் முறிந்து இருக்கும் மலையில் செல்லாதீர்கள்.குன்றுக்கு இடையில் உள்ள குழியில் அரிய துன்பம் தரும் இடையூறுகள் பல உண்டு.அங்கிருந்து பார்த்தால் கண்ணில் ஒளியே இல்லாதபடி,இருட்டாகக் காணப்படும். மிகுந்த மண் உடைய உங்கள் முழவின் கோலை கைத்தடியாகப் பயன்படுத்தி,வழுக்குவதைத் தடுக்க அதை ஊன்றிச் செல்லுங்கள்.அந்த வழியில் பெரிய இடையூறுகள் பல உள்ளன.காய்ந்த இரும்பு போன்ற வெப்பம் உடைய கூர்மையான கற்கள் கொண்ட பாறைகளும் அங்கு உண்டு.குளிரில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் வெயில்…

மழை மேகம் @ மலைபடுகடாம் |Rain clouds @ Malaipadukadaam

மழை மேகம் @ மலைபடுகடாம் கரிய நிறம் உடைய பெரிய மலையில்,சேர்ந்த கைகள் போலத் தீண்டும் கார்காலத்து மழை மேகக் கூட்டம்,பொங்கும் பஞ்சு போலக் காட்சி அளிக்கும்.நீர் தூவல்களைத் தூவி கனமான மழை பொழியும்.அந்த நேரத்தில் நீங்கள் திசைகளை சரியாகப் பார்த்து அறியமுடியாது.அதனால்,நீங்கள் சுமந்து கொண்டு வந்த இசைக்கருவிகளை நனையாமல் பாதுகாக்க,மிக விரைவாக சுற்றத்தாரோடு கிணறுகள் போல இருக்கும் மலைக்குகைகளுக்குள் புகுந்து விடுங்கள். மைபடு மாமலை பனுவலின் பொங்கி கை தோய்வு அன்ன கார்மழைத் தொழுதி தூஉயன்ன…