#திருப்பாவை-பாசுரம் 30

ஆண்டாளின் திருப்பாவையால் அடையும் நன்மை வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். வடக்கில் உள்ள மலையை மத்தாக நிறுத்தி,வாசுகி என்னும் பாம்பைக் கயிறாக்கி,அலைகள் நிறைந்த திருப்பாற்கடலை கடைந்த திருமகளின் கணவனான மாதவனும்,கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான…

#திருப்பாவை-பாசுரம் 29

மற்ற ஆசைகளை நீக்கி அருள வேண்டும் கண்ணா ! சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன் பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். அழகான வைகறைப் பொழுதில் மிகச் சீக்கிரமாக எல்லோரும் எழுந்து வந்து, உன்னை வணங்கி,உன் தங்கத் தாமரை போன்ற திருவடிகளைப் போற்றும் காரணத்தை…

#திருப்பாவை-பாசுரம் 28

  கோபப்படாமல் எங்கள் பரிசை தந்தருள் கண்ணா ! கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம் அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம் குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய். பசுக்களை மேய்த்து,அதன் பின்னால் காட்டுக்குச் சென்று,அங்கு அனைவரும் ஒன்று கூடி உணவு உண்ணும் இயல்பு உடையவர்கள் நாங்கள்.அறிவு குறைந்திருக்கும் எங்கள் இடையர் குலத்தில்…

#திருப்பாவை-பாசுரம் 27

கண்ணா! உன்னிடமிருந்து பெறவேண்டிய பரிசு….        கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் உன்னுடன் கூட முடியாத பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தா ! நாங்கள்…

#திருப்பாவை-பாசுரம் 26

நோன்பிற்குத் தேவையான பொருட்களை அளிப்பாய் கண்ணா ! மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் அன்பை பொழிந்து எங்கள் மேல் பித்தாக இருப்பவனே! நீல ரத்தினக்கல்லைப் போன்ற நிறத்தை உடையவனே ! முன்னோர்கள் வழிவழியாக அனுசரித்த மார்கழி நோன்பை மேற்கொள்ள…

#திருப்பாவை-பாசுரம் 25

எங்கள் துயர் நீக்கு கண்ணா! ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கில னாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில் நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் தேவகியின் மகனாகப் பிறந்து,பிறந்த அந்த இரவிலேயே யசோதைக்கு மகனாகி ஒளிந்து வளர்ந்தாய்.அதை பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான்.அவன் எண்ணம் அழியும்…

#திருப்பாவை-பாசுரம் 24

கண்ணா உன்னைப் போற்றுகிறோம்! அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி சென்றங்கு(த்) தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி பொன்ற(ச்) சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் வாமனன் எனும் குட்டையான வடிவத்தில்,மூன்றடிகளால் உலகத்தை அளந்தவனே,உன் திருவடிகளைப் போற்றுகிறோம்…

#திருப்பாவை-பாசுரம் 5

அடையும் பலன்கள் “மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் தூய பெரு நீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.” மாயங்கள் செய்பவனை,வட மதுரையில் பிறந்த குமரனை,பெருகி ஓடும் துாய்மையான நீரைக் கொண்ட யமுனைத் துறையில் வசிப்பவனை, இடையர் குலத்தில் தோன்றிய…

#திருப்பாவை-பாசுரம் 23

குறைக் கேட்டு,அருள் புரிய வேண்டும் கண்ணா! மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலேநீ, பூவைப் பூவண்ணா உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் மழைக்காலத்தின் போது, மலையில் இருக்கும் குகையில் ஒட்டிக் கொண்டு அமைதியாக பெருமை மிக்க சிங்கம் உறங்கும்.அந்த சிங்கம் உறக்கத்தில் இருந்து…

#திருப்பாவை-பாசுரம் 22

செந்தாமரைக் கண்ணால் பார் கண்ணா! அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே சங்கம் இருப்பார்போல், வந்து தலைப்பெய்தோம். கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல், அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். அழகிய அகன்ற இடங்களைக் கொண்ட இந்த உலகத்தை ஆட்சி செய்யும் அரசர்கள்,தங்கள் பெருமைகளைக் குலைத்து,நீ பள்ளி கொண்டிருக்கும் கட்டிலின் கீழ்,கூட்டமாகக் காத்து நிற்கிறார்கள்….