பசும் பால் @ மலைபடுகடாம் |Cow’s milk @ Malaipadukadaam

பசும் பால் @ மலைபடுகடாம் புலி வருவதைக் கண்டு வெறுத்து ஓடிய தனது விருப்பமான துணையை நினைத்து,கலைமான் நின்று கூப்பிடும் காட்டை நீங்கள் முறையாகக் கடந்து விடுங்கள்.வில்லின் ஓசைக்கு அஞ்சிய சிவந்த கண் உடைய மரையேறு தனக்கு முன்பாக இருக்கும் குறுங்காட்டில் விரைந்து ஓடும்.மணக்கும் கொடிகளை உடைய அத்தகைய காட்டில்,வேறு புலங்களில் சென்று மேய்ந்த ஏற்றை உடைய கோவலர்கள் இருப்பார்கள்.அவர்களின் வளையல் அணிந்த பெண்கள் நீங்கள் மகிழும்படி,சங்கு போன்ற வெண்மையான இனிய பசும் பாலை உங்களுக்குத் தாராளமாகத்…

கவண் @ மலைபடுகடாம் |Hand catapult @ Malaipadukadaam

கவண் @ மலைபடுகடாம் பிறந்த நிலையில் இருந்து மாறி,முற்றிய நிலையில் இருக்கும் புனத்தைக் காவல் காக்கக் குறவர்கள் சூழ்வார்கள். அவர்கள் உயர்வான ‘இதணம்’ என்னும் பரண் மேல் ஏறிக்,கையைக் கொட்டி,அகன்ற மலையில் இருக்கும் ‘இறும்பு’ என்னும் சிறு காட்டில்,பகல் பொழுதில் விளைந்ததைத் திண்ண நெருங்கி வரும் யானையைத் தவிர்க்க கவணால் கடுமையான கற்களை உமிழ்வார்கள்.இதற்குப் பயந்து கருமையான விரல்கள் உடைய கருங்குரங்குகளும் தன் குட்டிகளுடன்,பெரிய மூங்கிலின் ஈரமான கோலைத் தத்திக் கொண்டு,’கல்’ என்னும் ஓசையுடன் ஓடும்.உயிர்களை அழிக்கும்…