நவிர மலை @ மலைபடுகடாம் |Naviramalai @ Malaipadukadaam

  நவிர மலை @ மலைபடுகடாம் வறுமையால் வாடும் புலவர்களுக்குத் தகுந்தவாறு கை நிறைய நகைகளைப் பெய்த,ஏறி இறங்கி உழலும் தொடி அணிந்த நன்னனின் கவிழ்ந்த பெரிய கைகள் வளமை மாறுதல் என்பதே அறியாமல் விளங்கட்டும்.வளமை வாய்ந்த,முதிர்ந்த,மூங்கில் வளர்ந்த நவிர மலை மேல் விரைவாக மழை பெய்வது போல் தன்னிடம் வந்தவர்களுக்கு முதல் நாளே கொடை அளிப்பவன் நன்னன்.நவிர மலையில் இருந்து கொட்டும் அருவிகள்,நன்னனின் வெற்றி கொடிகள் போல் தோன்றும்.மலைகள் சூழ்ந்த நாட்டிற்கு உரிமையானவன் நன்னன். இலம்படு…

விறலியரின் கடவுள் வாழ்த்து @ மலைபடுகடாம்|Viraliyar’s  prayer song @ Malaipadukadaam

விறலியரின் கடவுள் வாழ்த்து @ மலைபடுகடாம் (விறல்-திறமை,உணர்வுகளைத் திறமையாக நடித்துக் காட்டும் ஆற்றல் உடையவர்கள் என்பதால் ‘விறலியர்’) வானத்தைப் போன்ற வளம் மிகுந்த உயர்வான யானையின் தாதாகிய எருக்கள் நிறைந்த முற்றத்தை அடைவீர்கள். மழை முழக்கத்திற்கு எதிராக முழங்கும் கண்ணை உடைய முழவின் கண்கள் முழங்க.மூங்கில் குழாயில் இசை வளர்கின்ற ‘தூம்பு’ எனும் பெருவங்கியம் ஒலிக்க,மருதம் வாசித்த கருமையான தண்டை உடைய சிறிய யாழின் நரம்பினுடைய ஓசைக்கு மேலே போகாத,அந்த ஓசையுடன் கூடி ஒன்றுபட்டு,செய்ய வேண்டிய கடமைகளை…

நன்னன் அரண்மனை வாசல் (3) @ மலைபடுகடாம் |Front yard of Nannan’s palace (3) @ Malaipadukadaam

நன்னன் அரண்மனை வாசல் (3) @ மலைபடுகடாம் குடகு மலையில் பிறந்த குளிர்ச்சியான பெரிய காவிரி ஆறு கடலில் சென்று கலக்கும் ஆழமான இடத்தை போல,பகைவர்களை பொறுக்காத போர் ஆற்றல் மிகுந்த நன்னனின் நீண்ட வாசலில் இவை அனைத்தும் நிறைந்திருந்தன : பருத்த ‘பளிங்கு’ எனும் கற்பூர மரத்தில் இருந்து உதிர்த்த பல அழகான மணிகள், நிறமுடைய புலியால் கொல்லப்பட்ட புண்ணான யானையின் முத்து உடைய கொம்புகளின் வலிமை மிகுந்த குவியல், சங்கு போன்ற இதழுடைய காந்தள்,நாகம்,திலகம் மலர்கள்,…

கரும்பின் ஓசை,வள்ளைப் பாட்டு & பறை ஓசை @ மலைபடுகடாம் |Sugarcane sound,Vallai pattu & Parai sound  @ Malaipadukadaam

கரும்பின் ஓசை,வள்ளைப் பாட்டு & பறை ஓசை @ மலைபடுகடாம் அனைத்துக் கரும்புச் சாறு பொழியும் ஆலைகளிலும்,விரைவாக கரும்புத் தண்டுகளில் இருக்கும் கண்களை உடைக்கும் போது கரும்பில் ஏற்படும் ஓசை,மழைப் பொழிவதைக் காணும் போது கேட்ட ஒலி போல இருக்கும்.தினை குத்துகின்ற பெண்கள் இசைப்படப் பாடும் வள்ளைப் பாட்டும்,சேப்பங்கிழங்கையும்,மஞ்சளையும் வளர்த்து காப்பவர்கள்,பன்றிகள் அவற்றை அகழாமல் பாதுகாக்க,பன்றிகளை ஓட்டுதற்கு அடிக்கும் பறை ஓசையும் அங்குக் கேட்கும்.   மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக் கழை கண் உடைக்கும் கரும்பின்…

பாகனின் கலப்பு மொழி /கிளி ஓட்டுதல் @ மலைபடுகடாம் |Different languages of Elephant trainer & Parrot chasing @ Malaipadukadaam

பாகனின் கலப்பு மொழி /கிளி ஓட்டுதல் @ மலைபடுகடாம் எதற்கும் அஞ்சாத யானை ஒன்று நீண்ட சுழியில் அகப்பட்டு சிக்கி கிடக்கிறது.அப்போது,யானையின் மிகுந்த கோபத்தை தணித்து,அதை பெரிய தூணில் கட்ட,யானை பாகன் கலப்பு மொழிகளில் பேசி பயிற்சி தரும் ஓசை கேட்கும். புனங்களில்,ஒலிக்கும் மூங்கிலால் செய்த தட்டையை அடித்து,கிளிகளை ஒட்டுகின்ற பெண்களின் கூச்சலால் எழும் ஆரவாரம் கேட்கும். (மூங்கிலைக் குறுக்கே நறுக்கிப் பிளந்து,ஓசை வருமாறு அதை ஒன்றில் மேல் தட்டும் கருவிக்கு ‘கிளிகடி’என்று பெயர்) நெடுஞ்சுழிப் பட்ட…

மலைப்பாதை @ மலைபடுகடாம் |Mountain Path @ Malaipadukadaam

மலைப்பாதை @ மலைபடுகடாம்  காட்டில் மலைப்பாதை வழியாகச் செல்லக்கூடும்.அங்கு,உயரமான பரண் மேல் ஏறி எய்த அம்பு பட்டு,பன்றிகள் விழுந்துகிடக்கும்.பெருகி வழியும் வெண்ணெய் போன்ற வெண்மையான கொழுப்புடனும்,மார்பில் ஆழமானப் புண்ணுடனும்,மண் படிந்த கொம்புகளுடனும்,கருப்பான சொரசொரப்பு உடைய கழுத்துடனும்,இருள் துண்டுபட்டு இருப்பது போல நிலத்தில் நெறிகெட்டுக் கிடக்கும் அந்தக் கரியப் பன்றிகளை நீங்கள் கண்டால்,உலர்ந்த மூங்கில் உரசியதால் காடெங்கும் உண்டாகிய தீயில் புகை அதிகமாகி நாற்றம் பரவாதவாறு வாட்டி மயிர் போகச் சீவி தின்னுங்கள். களங்கம் எதுவும் இல்லாமல்,தெளிந்து,நீலமணி போல…

சோழி & தேனடை @ மலைபடுகடாம் | Cowry shell & honeycomb  @ Malaipadukadaam

சோழி & தேனடை @ மலைபடுகடாம் ‘அலகை’ அதாவது சோழி போன்ற வெண்மையான அடிப் பகுதி(இதை ‘முருந்து’ என்கிறார்கள்) உடைய பீலிகள் சேர்ந்த ‘கலவம்’ என்னும் தோகை உடைய மயில்கள் காட்டில் தளர்ந்து நிற்பதைக் கண்டாலும், கடுமையான பறை உடைய கூத்தர்களின் சிறுவர்கள் போல ஆண் குரங்குகள் நீண்ட மூங்கில் கொம்புகளில் குதித்தாலும், நேரான நீண்ட மலைகள் இருக்கும்.அச்சம் தரும் மலைச் சரிவில் சக்கரம் போலக் கட்டியிருக்கும் தேனடையைக் கண்டாலும், நீங்கள் அவற்றை வேகமாகப் பார்ப்பது நல்லதல்ல,பாதுகாப்பாக…

கவண் @ மலைபடுகடாம் |Hand catapult @ Malaipadukadaam

கவண் @ மலைபடுகடாம் பிறந்த நிலையில் இருந்து மாறி,முற்றிய நிலையில் இருக்கும் புனத்தைக் காவல் காக்கக் குறவர்கள் சூழ்வார்கள். அவர்கள் உயர்வான ‘இதணம்’ என்னும் பரண் மேல் ஏறிக்,கையைக் கொட்டி,அகன்ற மலையில் இருக்கும் ‘இறும்பு’ என்னும் சிறு காட்டில்,பகல் பொழுதில் விளைந்ததைத் திண்ண நெருங்கி வரும் யானையைத் தவிர்க்க கவணால் கடுமையான கற்களை உமிழ்வார்கள்.இதற்குப் பயந்து கருமையான விரல்கள் உடைய கருங்குரங்குகளும் தன் குட்டிகளுடன்,பெரிய மூங்கிலின் ஈரமான கோலைத் தத்திக் கொண்டு,’கல்’ என்னும் ஓசையுடன் ஓடும்.உயிர்களை அழிக்கும்…

மலையில் பெரும் உணவுகள் @ மலைபடுகடாம் |Food served in mountains @ Malaipadukadaam

மலையில் பெரும் உணவுகள் @ மலைபடுகடாம் ஏறி வரும் மலை தரும் ‘தாரம்’ என்னும் பண்டங்களோடு,மூங்கிலில் ஊற்றி முற்ற வைக்கப்பட்ட இனிய கள்ளை வடிகட்டி எடுத்த ‘தேறல்’ என்னும் தெளிவைக் குறைவின்றிப் பருகலாம்.பின் ‘நறவு’ என்னும் நெல்லால் செய்த கள்ளையும் மகிழ்ச்சியுடன் பருகலாம். அதிகாலையில் முன் இரவில் மகிழ்ச்சி அடைந்த உங்கள் மயக்கம் தீர,இந்த உணவுகளைத் தருவார்கள் : அருவி கொண்டு வந்த பழம் சிதைத்த வெள்ளை விதைகள், ஓடி வந்த கடமானின் வேகத்தைத் தடுத்து,அதை கொன்று…