நவிர மலை @ மலைபடுகடாம் |Naviramalai @ Malaipadukadaam

  நவிர மலை @ மலைபடுகடாம் வறுமையால் வாடும் புலவர்களுக்குத் தகுந்தவாறு கை நிறைய நகைகளைப் பெய்த,ஏறி இறங்கி உழலும் தொடி அணிந்த நன்னனின் கவிழ்ந்த பெரிய கைகள் வளமை மாறுதல் என்பதே அறியாமல் விளங்கட்டும்.வளமை வாய்ந்த,முதிர்ந்த,மூங்கில் வளர்ந்த நவிர மலை மேல் விரைவாக மழை பெய்வது போல் தன்னிடம் வந்தவர்களுக்கு முதல் நாளே கொடை அளிப்பவன் நன்னன்.நவிர மலையில் இருந்து கொட்டும் அருவிகள்,நன்னனின் வெற்றி கொடிகள் போல் தோன்றும்.மலைகள் சூழ்ந்த நாட்டிற்கு உரிமையானவன் நன்னன். இலம்படு…

நன்னனின் பரிசு @ மலைபடுகடாம் |Nannan’s gifts @ Malaipadukadaam

நன்னனின் பரிசு @ மலைபடுகடாம் பல நாட்கள் அங்குத் தங்காமல் நாங்கள் எங்கள் பழமையான ஊருக்குப் போக நினைக்கிறோம் என்று நீங்கள் மென்மையாகக் கூறி புறப்பட்டீர்கள் என்றால்,மண் தின்னும்படி கிடந்த பொருள் குவியலோடு நன்னனிடம் இவற்றைப் பரிசாகப் பெறுவீர்கள்: உங்கள் தலைவன் சூடிக்கொள்ளுமாறு பொன் தாமரை மலர், உணர்வுகளைத் திறமையாக நடித்துக் காட்டும் ஆற்றல் உடை விறலியர் அணிய அழகான சிறந்த ஒளிவீசும் நகைகள், நீர் இயங்குவது போலச் சரியாகச் செல்லும் நீண்ட தேர்கள், வாரி கொள்ள…

கலிங்கம் @ மலைபடுகடாம் |Kalingam  @ Malaipadukadaam

கலிங்கம் @ மலைபடுகடாம் நன்னன் உங்களுக்கு இழை போன இடம் தெரியாமல் நுழைந்த நூலால் நெய்த ‘கலிங்கம்’ என்னும் புடவையை அளிப்பான்.அதை இகழ்ச்சி இல்லாத சிறப்பு உண்டாகுமாறு உங்களின் வெள்ளையான இடையில் உடுத்திக் கொள்ளுங்கள்.மேலும் பெண் நாய் கொண்டு வந்து தந்த கொழுப்பு சேர்ந்த இளம் தசையோடு,நீண்ட வெள்ளை நெல்லின் அரிசியையும் அளவில்லாமல் பெறுவீர்கள். இழை மருங்கு அறியா நுழை நூற் கலிங்கம் எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு…

விறலியரின் கடவுள் வாழ்த்து @ மலைபடுகடாம்|Viraliyar’s  prayer song @ Malaipadukadaam

விறலியரின் கடவுள் வாழ்த்து @ மலைபடுகடாம் (விறல்-திறமை,உணர்வுகளைத் திறமையாக நடித்துக் காட்டும் ஆற்றல் உடையவர்கள் என்பதால் ‘விறலியர்’) வானத்தைப் போன்ற வளம் மிகுந்த உயர்வான யானையின் தாதாகிய எருக்கள் நிறைந்த முற்றத்தை அடைவீர்கள். மழை முழக்கத்திற்கு எதிராக முழங்கும் கண்ணை உடைய முழவின் கண்கள் முழங்க.மூங்கில் குழாயில் இசை வளர்கின்ற ‘தூம்பு’ எனும் பெருவங்கியம் ஒலிக்க,மருதம் வாசித்த கருமையான தண்டை உடைய சிறிய யாழின் நரம்பினுடைய ஓசைக்கு மேலே போகாத,அந்த ஓசையுடன் கூடி ஒன்றுபட்டு,செய்ய வேண்டிய கடமைகளை…

நன்னன் அரண்மனை வாசல் (3) @ மலைபடுகடாம் |Front yard of Nannan’s palace (3) @ Malaipadukadaam

நன்னன் அரண்மனை வாசல் (3) @ மலைபடுகடாம் குடகு மலையில் பிறந்த குளிர்ச்சியான பெரிய காவிரி ஆறு கடலில் சென்று கலக்கும் ஆழமான இடத்தை போல,பகைவர்களை பொறுக்காத போர் ஆற்றல் மிகுந்த நன்னனின் நீண்ட வாசலில் இவை அனைத்தும் நிறைந்திருந்தன : பருத்த ‘பளிங்கு’ எனும் கற்பூர மரத்தில் இருந்து உதிர்த்த பல அழகான மணிகள், நிறமுடைய புலியால் கொல்லப்பட்ட புண்ணான யானையின் முத்து உடைய கொம்புகளின் வலிமை மிகுந்த குவியல், சங்கு போன்ற இதழுடைய காந்தள்,நாகம்,திலகம் மலர்கள்,…

நன்னன் அரண்மனை வாசல் (2) @ மலைபடுகடாம் |Front yard of Nannan’s palace (2) @ Malaipadukadaam

நன்னன் அரண்மனை வாசல் (2) @ மலைபடுகடாம் நன்னன் அரண்மனை வாசலில் இருந்தவை: மலையில் அழகாக ஆடும் மென்மையான மயில்கள், காட்டில் வாழும் கோழி , கவரும் குரல் உடைய சேவல், காட்டில் விளையும் முழவு போன்ற பெரிய பலாப் பழம், இடித்த மாவில் கற்கண்டைக் கலந்தது போல,நறுமணமான மாம்பழப் பிஞ்சில் இருந்த வடித்த சாறைக் கொண்டு செய்த இனிய பழத்தின் பண்டம்(என்ன பண்டமா இருக்கும் !), மழை தூறலில் மகிழ்ந்து படர்ந்த அரும்புகளுடன் வளர்ந்த கொடி,…

நன்னன் அரண்மனை வாசல் (1) @ மலைபடுகடாம்|Front yard of Nannan’s palace (1) @ Malaipadukadaam

நன்னன் அரண்மனை வாசல் (1) @ மலைபடுகடாம் நன்னன் அரண்மனை வாசலில் இருந்த சில உயிரினங்கள்: நெருப்பைக் காண்பது போன்ற பூங்கோம்புகள் உடைய வெண் கடம்பு மரத்தில்,தன் கூட்டம் ஓடிப் போனதால் வலிய வந்து அகப்பட்ட மென்மையான நடை உடைய ‘ஆமான்’ என்னும் காட்டுப் பசுவின் கன்று, குட்டி யானை, வாய் திறக்காத கரடியின் வளைந்த அடிகள் உடைய குட்டி, உயர்ந்த நிலத்தைக் கையாளும் வேகத்தை உடைய வளைந்த கால்கள் கொண்ட மலையில் வாழும் ‘வருடை’ என்னும்…

நன்னனின் ஊர் @ மலைபடுகடாம் |Nannan’s city @ Malaipadukadaam

நன்னனின்  ஊர் @ மலைபடுகடாம் செல்வம் தங்கும் உயர்ந்து ஓங்கி விளங்கும் மதில்கள் உடைய ஊரை விட்டு போவதை அறியாத பழமையான குடிமக்கள் வாழ்வார்கள். காலி இடம் இல்லாத அகன்ற சிறந்த பெரிய அங்காடித் தெருவையும்,ஆறு போலக் கிடக்கும் பெரிய தெருக்களையும் கொண்டது. திருவிழா போல எப்போதும் அங்கு மக்கள் கூட்டம் காணப்படும்.பகைவர்கள் அஞ்சும் பிரியும் குறுந்தெருக்கள் உடையது. கடல் போல,மழை போல ஒலிக்கும் ஆரவாரத்தோடு,மலை போல மேகம் போல ஓங்கிய மாடங்கள் உடையது. அன்புடையவர்கள் ஊடல்…

குமிழி @ மலைபடுகடாம் |Whirlpool  @ Malaipadukadaam

  குமிழி @ மலைபடுகடாம் வெள்ளையான நெல்லை அறுக்கும் உழவர்கள் கொட்டும் தண்ணுமை இசைக்கருவியின் ஒலிக்கு பயந்து,சிவந்த கண்ணுடைய எருமைக் கூட்டத்தைப் பிரிந்த கடா ஆரவாரம் கலந்த வேகத்தோடு உங்களை நோக்கி விரைந்து வரலாம்,அதனால் பாதுகாப்பாகச் செல்லுங்கள். குயவன் மண் பாண்டங்கள் செய்யும் இடத்தில் இருக்கும் உருளையின் சுழற்சி போல குமிழி சுழலும். விரைந்து ஓடும் வாய்க்காலில்,நீர் ஓயாமல் ஓடி ஒலி எழுப்பும் காட்சி காண்பவர்கள் விரும்பும் காட்சி ஆகும்.அதனால்,இனிய சேயாற்றின் வளமை உடைய ஒரு கரை…

மீன் சோறு @ மலைபடுகடாம் |Fish rice  @ Malaipadukadaam

மீன் சோறு @ மலைபடுகடாம் முள்ளை நீக்கி ஆக்கிய வெள்ளை மீன் துண்டுகள் உடைய வெண்மையான சோற்றைத் தருவார்கள்.வண்டுகள் வந்து தன் மீது படியும்படி நறுமணம் கமழும் தேன் சொரிகின்ற தலை மாலையையும்,உறுதியான தேரும் கொண்ட நன்னனுக்கு உணவாக இவை பொருந்தும் எனக் கண்டவர்கள் வியக்கும்படி,சுற்றத்தாரோடு அருந்துங்கள்.பிறகு எருத்தை அடிக்கின்ற வயல் களத்தில் வேலை செய்யும் உழவர்கள் பாடும் பாட்டுடன் இசைக்கும்படி,நல்ல யாழில் மருத பண்ணை வாசித்து இளைப்பாறிச் செல்லுங்கள். முள் அரித்து இயற்றிய வெள் அரி…