பாம்பு வழிபாடு @ மலைபடுகடாம் | Snake worship @ Malaipadukadaam

snake worship.png

பாம்பு வழிபாடு @ மலைபடுகடாம்

நெருங்கிப் பலரும் செல்லாத வழியில் செல்லத் துணிந்தால்…

நெருங்கிப் பலரும் செல்லாத வழியில் செல்லத் துணிந்தால்…
 
‘முரம்பு’ என்னும் மேட்டு நிலத்தில் இருந்து உடைந்த பருக்கைக் கற்கள் உடைய ‘அவல்’ என்னும் பள்ள நிலங்கள் காணப்படும்.அதில் இருக்கும் வெடிப்புகளில் பாம்புகள் மறைந்து ஒடுங்கி உள்ள ‘பயம்பு’ என்னும் குழிகள் உள்ளன.அக்குழிகளை மனதால் குறித்துக் கொண்டுச் செல்லுங்கள்.மரங்கள் மேல் ஏறி ஓசை எழுப்பிப் பாருங்கள்.
 
(‘மரங் கொட்டி’ என்றால் மரத்தின் மேல் நின்று ஓசை எழுப்புதல்,இப்படிச் செய்வதால் பாம்புகள் மறைந்து இருந்தால் தென்படக் கூடும்).
 
பாம்புகள் தென்பட்டால், கை நிறைய வளையல்கள் அணிந்த உங்கள் விறலியர்களைக்(நடனமாடும் பெண் கலைஞர்கள்) கைகுவித்து வணங்கிப் போற்றச் செய்யுங்கள்.அந்த வழியில் இருந்து சிறிது விலகி,வலப்பக்கத்தில் உள்ள வழியாகச் செல்லுங்கள்

நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின்
முரம்பு கண் உடைந்த பரல் அவற் போழ்வில்
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே
குறிக் கொண்டு மரங் கொட்டி நோக்கி
செறி தொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச
வறிது நெறி ஓரீஇ வலம் செயாக் கழிமின்

குறிப்பு

செப்பம்-வழி
செறிந்து-நெருங்கி
முரம்பு-மேட்டு நிலம்
அவல்-பள்ள நிலம்
போழ்வு-பிளவு
கரந்து-மறைந்து உறை
பயம்பு – குழி
பழிச்ச-போற்றி
வறிது-சிறிது
ஓரீஇ-ஒதுக்கி,நீங்கி
கழிமின்-கழித்துவிடுங்கள்.
பரல்-பருக்கைக் கல்
மரங் கொட்டி-மரத்தின் மேல் நின்று ஓசை எழுப்புதல்

Snake worship @ Malaipadukadaam

If you wish to go in the path which many people avoid going,snakes hide and live in the cracked pits in the low lying areas which have broken small stones from raised land.You need to keep in mind about this while going that way.Get on top of the trees and make noise(This will bring out the hidden snakes if they are there).If you spot the snakes,ask your female dancers,to fold their hands full of bangles and worship them.Move away from that path and take the way on the right side

பின்னூட்டமொன்றை இடுக