கவண் @ மலைபடுகடாம் |Hand catapult @ Malaipadukadaam

kavan.png

கவண் @ மலைபடுகடாம்

பிறந்த நிலையில் இருந்து மாறி,முற்றிய நிலையில் இருக்கும் புனத்தைக் காவல் காக்கக் குறவர்கள் சூழ்வார்கள். அவர்கள் உயர்வான ‘இதணம்’ என்னும் பரண் மேல் ஏறிக்,கையைக் கொட்டி,அகன்ற மலையில் இருக்கும் ‘இறும்பு’ என்னும் சிறு காட்டில்,பகல் பொழுதில் விளைந்ததைத் திண்ண நெருங்கி வரும் யானையைத் தவிர்க்க கவணால் கடுமையான கற்களை உமிழ்வார்கள்.இதற்குப் பயந்து கருமையான விரல்கள் உடைய கருங்குரங்குகளும் தன் குட்டிகளுடன்,பெரிய மூங்கிலின் ஈரமான கோலைத் தத்திக் கொண்டு,’கல்’ என்னும் ஓசையுடன் ஓடும்.உயிர்களை அழிக்கும் முறையில் எமனைப் போல விசை மாறாமல் வரும்,அதனால் மரங்களில் ஒதுங்கிச் செல்லுங்கள்

புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானைப்
பகல் நிலை தவிர்க்கும் கவண் உமிழ் கடுங்கல்
இரு வெதிர் ஈர்ங்கழை தத்தி கல்லெனக்
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன
வரும் விசை தவிராது மரம் மறையாக் கழிமின்

குறிப்பு

புலந்து-முற்றி (புலர்தல்-முற்றுதல்)
போகிய-இல்லாத
புனிறு-பிறந்த நிலை
இதணம்-பரண்
புடையூஉ-புடைத்து,அடித்து
இறும்பு-சிறு மரங்கள் நிறைந்த காடு
துவன்றிய-நெருங்கிய
இரு-பெரிய
வெதிர்-மூங்கில்
கழை-மூங்கில் குழய்,கோல்
ஊகம்-கருங்குரங்கு
பார்ப்பு-விலகின் குட்டி
இரிய-ஓட
செகு-அழிந்த
கூற்றம்-எமன்

Hand catapult @ Malaipadukadaam

Kuravar surround and guard the matured fields,which have crossed their young stage.They stand on high loft,clap their hands and shoot fierce stones from Hand catapults to avoid elephants that come near the fields during the day time in the small forest near the mountains.Even the black monkeys with black fingers get scared ,jump from big wet bamboo stalks with loud sounds along with their children and move away .Like Yama this continuous force will destroy life,so go safely by hiding yourself under trees.

 

பின்னூட்டமொன்றை இடுக